ஈரோடு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தலைவர்களின் சிலைகளை மறைக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கிழக்கு தொகுதி காலியாக உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் தேதியை அறிவித்ததால், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.