வேலூர் மாநகராட்சி கழிவுநீர் கால்வாயில் தூர் வாரும் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த ஊழியர் திடீரென கால்வாயில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். கீழ்மொனவூர் பெருமாள் நகரை சேர்ந்த முருகன் வேலூர் மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். மக்கான் சிக்னல் பகுதியில் உள்ள மூடப்படாத கழிவுநீர் கால்வாயில் வாரிக் கொண்டிருந்த முருகன் திடீரென கால்வாயில் மயங்கி விழுந்தார். சக துப்பரவு பணியாளர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போது அவர் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது.