கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் பொது இடங்களில் முககவசம் அணிவது அவசியம் என்றும், இது கட்டாயம் இல்லை எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் என்பது வீரியம் குறைந்தவை என தெரிவித்தார். தமிழகத்தில் கொரனோ வைரசால் பாதிக்கப்பட்டிருந்த இருவர் இணைநோய் பாதிப்பால் இறந்ததாக விளக்கம் அளித்தார்.