கூட்டுறவு வங்கியில் மூலம் வாங்கும் கடனை மக்கள் திருப்பி செலுத்தினால் தான் அரசாங்கத்தை நடத்த முடியும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடைபெற்ற கூட்டுறவு வாரவிழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், கூட்டுறவு வங்கியில் கடன் வாங்கினால் தள்ளுபடி செய்து விடுவார்கள் என்று எண்ண வேண்டாம் என்றும் தொடர்ந்து தள்ளுபடி செய்தால் வங்கியை எப்படி நடத்த முடியும் எனவும் கேள்வி எழுப்பினார். மேலும், பொங்கல் பண்டிகையொட்டி, மக்களுக்கு இலவசமாக பொங்கல் பொருட்கள் வழங்கப்பட உள்ளதால், கடை ஊழியர்கள் நியாயமாக செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.