பெரம்பலூர் அருகே ஆதிதிராவிடர் நல விடுதியில் வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்ததாக புகாரளித்த மாணவிகள் இருவர், சமையலர் தாக்கியதால் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வெண்பவூர் அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகள் சிலர், ஆதிதிராவிடர் நல விடுதியில் தங்கி படித்து வரும் நிலையில், விடுதி உணவில் புழுக்கள் இருந்ததாக புகாரளித்தனர். இதனால் ஆத்திரமடைந்த சமையலர் செல்வி கடுமையாக தாக்கியதில் 8 மற்றும் 7ஆம் வகுப்பு மாணவிகள் காயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சமையலர் செல்வி தாமும் காயமடைந்ததாகக் கூறி மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.