நாமக்கல்லில் வழித்தட பிரச்சனையில் வருவாய்த்துறை ஆய்வாளரின் கணவரை, திமுக எம்எல்ஏவின் உறவினர்கள் கடுமையாக தாக்கியது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆஞ்சநேயர் கோயில் பின்புறத்தில் வருவாய் ஆய்வாளள் சாலாவுக்கும், எதிர் வீட்டில் வசித்து வரும் திமுக எம்எல்ஏ ராமலிங்கத்தின் உறவினர் அருண்குமாருக்கும் இடையே வழித்தடம் தொடர்பாக பிரச்சனை இருந்துள்ளது. இந்த நிலையில், தமது வீட்டின் அருகே வளர்ந்திருந்த புற்களை அகற்றிய அருண்குமார், அதனை சாலா வீட்டின் முன்பு கொட்டியதாக தெரிகிறது. இதனால் சாலாவின் கணவர் ரவிக்குமாருக்கும், அருண்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ரவிக்குமாரை, அருண்குமாரின் மகன்கள் கன்னத்தில் அறைந்தும், தடுக்க சென்ற சாலா மற்றும் அவரது உறவினரையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.