தஞ்சாவூர் மாநகராட்சியில் கடந்த 3 மாத காலமாக சம்பளம் வழங்காததை கண்டித்து ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தீபாவளி பண்டிகை நெருங்கும் வேளையில் ஊதியம் வழங்கப்படாதது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர். மாநகராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.