நாமக்கல் வீசாணம் ஏரியில் முறைக்கேடாக மண் அள்ளிய அரசு ஒப்பந்ததாராரின் லாரி, பொக்லைனை சிறைபிடித்த மக்கள் மோட்டார் அறைக்கும் பூட்டு போட்டனர்.நாமக்கல் நகரை சுற்றி புறவழிச்சாலை அமைக்கும் பணியை கொடுமுடியை சேர்ந்த KTR & CO என்ற ஒப்பந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.இதற்காக வீசாணம் ஏரியில் தற்காலிக பிளாண்ட் அமைத்துள்ள இந்நிறுவனம், ஏரியில் அனுமதியின்றி மண் அள்ளுவதோடு, ஊராட்சிக்கு சொந்தமான மோட்டார் அறையில் மின்சாரம் மற்றும் ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீரை முறைக்கேடாக எடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.