பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். காரைக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட சங்கராபுரம், அரியக்குடி, இலுப்பக்குடி போன்ற பகுதிகளில் 350க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் உள்ள நிலையில், அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி AITUC தொழிற் சங்கத்துடன் இணைந்து மாநகராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நகரில் தூய்மை பணி பாதிக்கும் சூழல் ஏற்பட்டது. இதையும் படியுங்கள் : சென்னை - திருப்பதி NH சாலையில் அதிகாலையில் விபத்து 2 லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதால் பரபரப்பு