சிவகங்கை மாவட்டம் காரைக்குடி 7 ஆவது வார்டு பகுதியில் உள்ள நியாயவிலை கடையில் பொதுமக்கள் முன்னிலையிலேயே அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்டவற்றை கடத்தும் வீடியோ வெளியாகியுள்ளது. அண்ணாநகர் மாதவன் தெருவில் உள்ள நியாயவிலை கடையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்த நிலையில் பொருட்களை வாங்காமலேயே வாங்கியதாக குறுஞ்செய்தி அனுப்பி வரும் கடை பொறுப்பாளர், விற்பனையாளருடன் இணைந்து கள்ளச் சந்தையில் பொருட்களை விற்பனை செய்வதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.