தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் 3 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். ரோப் கார் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்ட நிலையில், பக்தர்கள் படி வழியாக மலை கோயிலுக்கு சென்றனர். கூட்டம் அதிகரித்ததால் சுமார் 3 மணி நேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நாளை கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.