தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பூட்டியிருக்கும் வீடுகளை குறி வைத்து தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த 3 கொள்ளையர்களை கைது செய்த திருகோவிலூர் போலீசார் 5 சவரன் தங்க நகையை மீட்டனர். வாகன தணிக்கையின் போது கார் மற்றும் பைக்கை மறித்து சோதனையிட்ட போது காரில் இருந்த 3 பேர் பிடிபட்டனர். பைக்கில் இருந்த இருவர் தப்பி சென்று விட்டனர்.