இந்து சமய அறநிலைத்துறையை கண்டித்து மரப்பலகையால் ஆன மாதிரி யானை ஒன்றை வடி வமைத்து, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகிகள் கண்டன கோஷங்களை எழுப்பி ஊர்வலம் சென்றனர். அம்மனுக்கு அபிஷேகம் செய்ய யானை மீது புனித நீர் எடுத்து வர வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கையில்லை என அவர்கள் குற்றம் சாட்டினர்.