பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து சென்னையில் தங்கி பணியாற்றி வரும் மக்கள், ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர். இதனால் சென்னை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.