நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் குடிநீர் குழாய் இணைப்பிலுள்ள வால்வுகளை மர்ம நபர்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கண்டிப்புதூர் முருகன் கோவில் வீதி, பள்ளிபாளையம் பிரிவு சாலை, சந்தப்பேட்டை மற்றும் அக்ரஹாரம் பகுதிகளில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த இணைப்புகளில் இருந்த சுமார் 50 ஆயிரம் மதிப்புள்ள 30-க்கும் மேற்பட்ட பித்தளை வால்வுகளை இரவு நேரங்களில் மர்ம நபர்கள் திருடிச் செல்கின்றனர். வால்வுகளை திருடிய மர்ம நபர்கள் குறித்து சிசிடிவி காட்சிகளின் மூலம் போலிசார் விசாரித்து வருகின்றனர்.