திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே எண்ணூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கண்டெய்னர் லாரி, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் லாரியில் இருந்த கண்டெய்னர் சரிந்து, அருகில் வந்த மற்றொரு லாரி மீது சாய்ந்த நிலையில், அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் நூலிழையில் உயிர்தப்பினர்.