செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே இருசக்கர வாகனம் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். வேலை முடிந்ததும் பைக்கில் நண்பருடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த இளைஞர் மீது கண்டெய்னர் லாரி மோதியது. இதில் ஒரு இளைஞர் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.