மயிலாடுதுறை மாவட்டம் அரசூர் அருகே மசாலா பொருட்களை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி, கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பற்றி எரிந்தது. இதில் ஓட்டுநர் பாலசுப்ரமணியனுக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில், தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர்.