கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேந்தமங்கலம் ஜிஎஸ்டி சாலையில் கண்டெய்னர் லாரி, சிமெண்ட் லாரி விபத்துக்கு உள்ளாகின. இதனால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கரூரிலிருந்து சென்னைக்கு பேப்பர் லோடு ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இதனை தொடர்ந்து வந்த சிமெண்ட் லாரியும் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே உள்ள தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து காரணமாக, திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகனங்கள் அணிவகுத்து நின்றன. விபத்து குறித்து திருநாவலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்