ராணிப்பேட்டை சிப்காட் அருகே கண்டெய்னர் லாரி உரசியதில் நிலைதடுமாறி கீழே விழுந்த இரு இளைஞர்கள், கார் ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த சேஷாசலம் மற்றும் நாகேந்திரன், திருவண்ணாமலை கோவிலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது பைக் மீது கண்டெய்னர் லாரி உரசியதால் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். அப்போது பின்னால் வந்த கார் ஏறி இறங்கியதில் இருவரும் உடல்நசுங்கி உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.