திண்டுக்கல் மாவட்டம் நத்தம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மதுரையில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த லாரி நத்தம் கோரிமேடு பள்ளிவாசல் அருகே வந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் சங்கரன்கோவிலை சேர்ந்த ஓட்டுநர் குமார் என்பவருக்கு தலை, கை மற்றும் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டதால் ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.