சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய புஸ்ஸி ஆனந்த், உழைத்தவர்களுக்கு மட்டுமே கட்சியில் பதவி வழங்கப்படும் என்றார்.