நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டெருமை தாக்கியதில் கட்டிட தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். வண்டி சோலை அம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் அம்மன் நகர் பகுதியில் குடிநீர் தேக்க தொட்டியிலிருந்து தண்ணீர் திறந்துவிடும் பணியை மேற்கொண்டு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது காட்டெருமை ஒன்று திடீரென தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். சம்பவ இடம் விரைந்து குன்னூர் வனத்துறையினர் மற்றும் மேல் குன்னூர் காவல்துறையினர் மகேந்திரனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், விசாரணையும் நடத்தி வருகின்றனர்.