சென்னையில் நீர்நிலைகள் மற்றும் பொது இடங்களில் கொட்டப்படும் கட்டிட கழிவுகளை கண்காணிக்க 3 நடமாடும் குழுக்களை சென்னை மாநகராட்சி ஏற்படுத்தி உள்ளது.மாநகராட்சியின் எச்சரிக்கையை மீறி கட்டிட கழிவுகளை சாலையோரம் மற்றும் நீர்நிலைகளில் கொட்டிச் செல்வதாக தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில், இதனை கண்காணிக்க இந்த குழுக்களை சென்னை மாநகராட்சி அமைத்துள்ளது.இந்த குழுக்கள் நகரம் முழுவதும் ஆய்வு மேற்கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது.