திருவள்ளூர் அருகே உபரிநீர் கால்வாய் அமைக்கும் பணியில் சவுடு மண் பயன்படுத்துவதாக குற்றம்சாட்டி ஊழியர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரிய மனோபுரம் பகுதியில் உபரிநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதற்காக ஆரணி ஆற்றில் சவுடு மணல் எடுத்தும், தரமற்ற எம் சாண்ட் மற்றும் ஜல்லி-கம்பிகள் பயன்படுத்துவதாகவும் புகார் எழுந்த நிலையில் அங்கு சென்ற பொதுமக்கள், தரமற்ற பொருட்களால் கட்டப்படும் கால்வாய் எதிர்காலத்தில் இடிந்து விபத்து நடக்காதா? பொதுப்பணித்துறை அதிகாரிகள் எங்கே? என கேள்வி எழுப்பினர்.இதுகுறித்து தலைமை பொறியாளரிடம் விளக்கம் கேட்டபோது, எந்த சேனல் ரிப்போர்ட்டராக இருந்தாலும் பரவாயில்லை என்றும், பணி நடைபெறும் இடத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறினார்.