வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, உரிய அனுமதியின்றி வனப்பகுதியில் மண் சாலையை சமப்படுத்திய ஜேசிபி ஓட்டுநருக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. சூறாளூர் கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் ஜேசிபி மூலம் பாதை அமைத்த அதன் ஓட்டுநர் ராஜ்குமார் என்பவர் மீது வனத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.