அமெரிக்காவில் இந்தியர்களை அவமதித்ததை கண்டித்து புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். அமெரிக்காவில் இந்தியவர்களை அவமதித்தது தொடர்பாக மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுக்க கோரி, புதுச்சேரி சட்டப்பேரவை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர், போலீஸார் போட்டிருந்த தடுப்பை மீறி ஆளுநர் மாளிகை நோக்கி சென்றனர்.அப்போது, அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.