ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகி காரில் கடத்தப்பட்டதாக, அவரது குடும்பத்தினர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் கதறி துடித்தபடி புகாரளித்தனர். ஈரோடு லக்காபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜுபைர் முகமது. மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு தலைவரான இவர், சொகுசு கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், 2 கார்களில் வந்த நபர்கள் ஜுபைர் முகமதுவை கடத்திச் சென்றதாக, அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் புகாரளிக்க மாவட்ட எஸ்பி அலுவலகம் சென்றனர். அப்போது, கணவரை மீட்க வலியுறுத்தி, ஜுபைர் முகமதுவின் மனைவி மற்றும் தாயார் கதறி அழுதபடி தர்ணாவில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.