கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே வளர்ப்பு நாயால் மளிகை கடைக்காரரும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் கடுமையாக மோதிக்கொண்ட அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. பாகலூர் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்த மளிகை கடைக்காரர் வேணுகோபால் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்ற போது முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வி.டி.ஜெயராம் வளர்த்து வந்த நாய் துரத்தியது. அப்போது வேணுகோபால் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மனைவியிடம் தகராறு செய்த நிலையில் அவரது செல்போனை பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரது மளிகை கடைக்கு சென்ற முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருக்கும் மளிகை கடைக்காரருக்கும் மோதல் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.