தேனி அருகே தனியார் பள்ளி நிர்வாகம் தொடர்பான தகராறில், ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பழனிசெட்டிப்பட்டியை சேர்ந்த செல்வமனோகரன் நடத்தி வந்த பெனடிக் மெட்ரிகுலேஷன் பள்ளியை, மதுரையை சேர்ந்த சிஇஓஏ பள்ளி நிர்வாகம் எடுத்து கொண்ட நிலையில், ஒப்பந்தத்தின்படி, செல்வமனோகனுக்கு சிஇஓஏ பள்ளி நிர்வாகம் சரியாக பணம் தராமல் காலம் தாழ்த்தி வந்ததாக சொல்லப்படுகிறது.