கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு வந்த சமையல்காரர்களிடையே ஏற்பட்ட தகராறில், சாலையில் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ளும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 20 ஆம் தேதி அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு எதிரில் உள்ள மண்டபத்தில் நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்ச்சியில் சமையல் செய்வதற்காக கௌதம் என்பவர் வந்துள்ளார். நிகழ்ச்சியை முடித்து கொண்டு வெளியில் வந்த கௌதம் உள்ளிட்டோரை அழைத்த செல்வதற்காக அகிலன் என்பவர் வாகனத்தில் வந்ததாக கூறப்படுகிறது. அப்போது, வாகனத்தில் அழைத்து செல்வது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒருவர் மாறி ஒருவர் சாலையிலேயே கடுமையாக தாக்கி கொண்டனர்.