திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகளிடம் ரகளையில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளியிடம் போலீசார் விசாரணை நடத்தினர் . கடையிலிருந்து பிளாஸ்ட்டிக் பொருட்களை கைப்பற்றி நகராட்சி வாகனத்தில் ஏற்றும் போது வாகனத்தில் ஏறிய அந்த நபர் கையில் போட்டிருந்த காப்பை கொண்டு ஆக்ரோஷமாக வாகனத்தை தாக்கினார்.