நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்ட 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து, ஒன்றரை கிலோ கஞ்சா மற்றும் 100 கிராம் ஹைட்ரோபோனிக் என்ற வேதிப் பொருளையும் பறிமுதல் செய்தனர். ஊட்டி பேருந்து நிலையம் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து,அதன்பேரில் கஞ்சா வைத்திருந்த கேரளாவை சேர்ந்த அப்துல் வகாப், ஊட்டியை சேர்ந்த சுஜன் மற்றும் மெல்சர்பால் ஆகியோரை கைது செய்தனர்.