தூத்துக்குடி வஉசி கல்லூரியில் சுயநிதி பாடப்பிரிவு வகுப்புகளை வழக்கம்போல் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. வழக்கமாக காலை 9 மணி முதல் ஒரு மணி வரை கல்லூரி நடைபெற்று வந்த நிலையில், தற்போது வகுப்பை பிற்பகலுக்கு மாற்றியதாக கூறப்படுகிறது.