செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி தலைவரை கண்டித்து துணை தலைவர் தலைமையில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். துணைத் தலைவர் மற்றும் கவுன்சில்களின் கையெழுத்தை போலியாக பயன்படுத்தி ஊராட்சி பல லட்சம் ரூபாய் வரை ஊழல் செய்திருப்பதாக புகார் தெரிவித்தனர்.