ஜல்லி, எம்சாண்ட் உள்ளிட்ட கனிமவள பொருட்களின் உயர்வை கண்டித்து தேனியில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் நான்காவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டன. தமிழக மற்றும் கேரள பகுதிகளில் கட்டுமான பணிகளுக்கு தேவைப்படும் எம்சான்ட், பிசாண்ட், ஜல்லி உள்ளிட்ட கனிம வளங்கள் மாவட்டத்தின் பல பகுதிகளில் செயல்பட்டு வரும் கிரசர்களிலிருந்து டிப்பர் லாரிகள் மூலம் இரு மாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்படும் நிலையில் கனிமவள பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.இதனால் டிப்பர் லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பாதிப்படைவதாக கூறி, வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட டிப்பர் லாரிகள் உரிமையாளர்கள் விலை ஏற்றத்தை உடனடியாக வாபஸ் பெற கோரிக்கை விடுத்தனர்.