திருப்பத்தூர் கோனேரிக்குப்பம் பகுதியில் கழிவுநீர் செல்வதற்கு வழியில்லாமல் தெருக்களில் தேங்கி நிற்பதால் அப்பகுதி மக்கள் அவதியடைந்தனர். கடந்த 10 வருடங்களுக்கு மேலாகவே சாக்கடை இல்லாமல் தெருவிலேயே கழிவுநீர் தேங்கி நிற்பதாக குற்றம்சாட்டிய பொதுமக்கள், இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர். இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர், கவுன்சிலரிடம் புகாரளித்தும் நடவடிக்கை இல்லை என ஆதங்கப்பட்டனர்.