திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சாக்கடை கால்வாய் முறையாக அமைக்கப்படாததால் மழைநீர் சாலையோரத்தில் தேங்கி நிற்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் மழைநீர் தேங்கும் இடத்தில் அரசு கட்டடம் கட்டப்படுவதாக குற்றம் சாட்டிய பொதுமக்கள், சாலையோரத்தில் தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.