Government Hospital issue : விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அரசு மருத்துவமனையில் தைராய்டு பிரச்சனையுடன் சென்ற பெண்ணுக்கு தவறான மாத்திரை கொடுத்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. மாங்குளத்தைச் சேர்ந்த அழகுராணி, தைராய்டு பிரச்சனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் மாத்திரை வாங்கி பயன்படுத்தி வந்த நிலையில், விருதுநகர் சென்று வர சிரமம் ஏற்படவே காரியாபட்டி அரசு மருத்துவமனையில் மாத்திரை வாங்கி பயன்படுத்தியதாக தெரிகிறது.