திருப்பத்தூர் மாவட்டம் வெலக்கல்நத்தம் பையனப்பள்ளி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்திற்குள் அத்துமீறி நுழைந்து ஜேசிபி இயந்திரங்களால் மாமரங்களை சேதப்படுத்தி, வேலியை உடைத்த பாதை ஏற்படுத்திய ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட 2 பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட நபர் ஆட்சியரகத்தில் புகார் மனு அளித்துள்ளார். காவல் நிலையத்தில் புகாரளித்தும் ஊராட்சி தலைவர் ராமன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என அன்பரசு குற்றஞ்சாட்டினார்.