திருப்பத்தூரில் விநியோகம் செய்யப்படும் குடிநீர், கழிவு நீர் கலந்து கருப்பு நிறத்தில் காட்சி அளிக்கிறது. பெரியார் நகரில் 300க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நகராட்சி சார்பில் விநியோகம் செய்யப்படும் குடிநீர் கழிவு நீர் கலந்தும், துர்நாற்றம் வீசியும் கருப்பு நிறத்தில் இருப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கழிவு நீர் கலந்த குடிநீரை பயன்படுத்துவதால் காய்ச்சல், தோல் அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.இதையும் படியுங்கள் : தார்ச்சாலை அமைக்கும் பணி முடங்கியதால் பொதுமக்கள் அவதி... 6 மாதங்களாக ஜல்லிக் கற்களில் சிரமத்துடன் செல்லும் நிலை