குமரி மாவட்டம் செண்பகராமன் புதூர் பகுதியில் உள்ள குளத்தில் ஆய்வு செய்த வருவாய்த்துறை அதிகாரிகள், மண் எடுக்க நின்றிருந்த வாகனங்களை திருப்பி அனுப்பி வைத்தனர். ஆதிச்சன்புதூர் குளத்தில் விவசாய பயன்பாட்டிற்காக மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், அனுமதிச் சீட்டுக்கும் அதிகமாக வாகனங்களில் மண் அள்ளிச் செல்வதாக புகார் எழுந்தது.