திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த எடையூர் அருகேயுள்ள சங்கேந்தியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் உரிய நேரத்தில் பணிக்கு வருவதில்லை என புகார் எழுந்துள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் புறநோயாளிகள் பிரிவு காலை 9 மணி முதல் செயல்படும் நிலையில், 10 மணியானாலும் மருத்துவர்கள் பணிக்கு வருவதில்லை என கூறப்படுகிறது. இதனால் கர்ப்பிணிகள், முதியவர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழ்நிலை உள்ளதாக கூறும் பொதுமக்கள், இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.