உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் அரசு ஊழியர்களை வைத்து பிரச்சாரம் செய்து வருவதாக திமுக அரசு மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இபிஎஸ், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் மக்களிடையே உரையாற்றினார். அப்போது, கடந்த தேர்தலின் போது பெட்டியில் வாங்கி சென்ற மனுக்களுக்கு தீர்வு காணாமல், தற்போது அடுத்த தேர்தலுக்காக நாடகத்தை அரங்கேற்றுவதாக இபிஎஸ் சாடினார்.