பழனியில் உணவகத்தில் கூச்சலிட்டு கொண்டு இருந்தவர்களை தட்டிக்கேட்ட காவலரை தாக்கியதாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.பழனி அருகே உள்ள பாலசமுத்திரத்தை சேர்ந்த காவலர் துரைராஜ் அங்குள்ள தனியார் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இளைஞர்கள் கூச்சலிட்டு இடையூறு செய்துள்ளனர்.அமைதியாக இருக்கும் படி கண்டித்த காவலர் துரைராஜை இளைஞர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்.காவலரை தாக்கிய மாதேஷ், குணா, அரவிந்த், கட்டளை மாறி, பிரபு, பிச்சைமணி உள்ளிட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.