கன்னியாகுமரி மாவட்டம் சித்திரங்கோடு பகுதியில் உள்ள தனியார் கல்குவாரியால் மாத்தூர் தொட்டி பாலம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. சித்திரங்கோடு, வலியாற்று முகம் உள்ளிட்ட பகுதிகளில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. கற்களை வெட்டி எடுக்க வெடி பொருட்கள் பயன்படுத்தப்படுவதால் கல்குவாரிகளுக்கு நிரந்தரமாக தடை விதிக்கவேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.