தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே ஏரியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலுப்பட்டி ஏரி, காமாட்சி ஏரி, புது ஏரி ஆகிய மூன்று ஏரிகளுக்கு நீர் வரக்கூடிய வழித்தடங்களை, தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்துள்ளதை கண்டித்து 22 ஆம் தேதி பட்டினி போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்துள்ளனர்.