திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த சாலையை, ரயில்வே துறையினர் அடைத்ததால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாலன்வட்டம் பகுதியில், இருபுறமும் ரயில்வே தண்டவாளம் உள்ளதால் ரயில்வே துறை சார்பாக இருபுறமும் அலுமினிய தகடுகள் வைத்து அடைக்கப்பட்டது. வீட்டிற்கும் விவசாய நிலத்திற்கும் இடையேயான சாலையை அடைத்ததால் கடும் சிரமம் அடைந்து வருவதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்த மக்கள் உரிய நடவடிக்கை எடுக்காததால் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.