திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகராட்சிக்குட்பட்ட தற்காலிக தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் முறைகேடு நடந்துள்ளதாக,ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அரசு அறிவித்துள்ள சம்பளம் 585 ரூபாய் என்ற நிலையில், 350 ரூபாய் மட்டுமே ஒப்பந்ததாரர்கள் தருவதாக, தூய்மை பணியாளர்கள் புகார் கூறியுள்ளனர்.