தருமபுரி மாவட்டம் பி.மல்லாபுரத்தில், நிலத்தை அபகரிக்கும் நோக்கத்தில் போலியாக பத்திரப்பதிவு செய்ததுடன், அடியாட்களை வைத்து பாமக நிர்வாகி மிரட்டுவதாக கூறி, மருத்துவர் தனது குடும்பத்துடன் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். மருத்துவர் நபீலகாதர் என்பவர் கொண்டகரஹள்ளி பகுதியில் வாங்கியுள்ள நிலத்தை, அங்குள்ள பாமக கவுன்சிலர் ஒருவர் அபகரிக்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது.